20th October 2023 09:49:52 Hours
இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் படையணியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் சிவில் ஊழியர் ஒருவரின் மனைவிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
பயனாளி சமீபத்தில் அறுவை சிகிச்சை ஒன்றினூடாக வலது காலை இழந்தமையால் இவ் உதவி மிகுந்த ஆறுதலை அளித்தது. இந்த நிகழ்வு திங்கட்கிழமை (02 ஒக்டோபர் 2023) இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி பயிற்சி பாடசலையில் நடைபெற்றது.