19th December 2023 22:40:54 Hours
கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவினரால் தெற்கில் உயிரிழந்த 81 போர் வீரர்களை நினைவுகூறும் வகையில் சனிக்கிழமை (டிசம்பர் 9) மாத்தறை நகரின் அமைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவு தூபியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன், 180 உயிரிழந்த மற்றும் காணாமல் போன போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் மலர் வைத்தும், மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளை ஏற்றி அவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினார்.
கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி, அவர்களின் ஆதரவுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவும் மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும், நினைவேந்தல் விழாவின் புகைப்படப் பிரதிகள் அவர்கள் செல்வதற்கு முன் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டன.