18th November 2023 08:49:35 Hours
விசேட படையணி பயிற்சிப் பாடசாலையின் ஏற்பாட்டில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவு மல்தெனிய ஆரம்பப் பாடசாலை மற்றும் கனிவிகல ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலவச உலர் உணவுப் பொதிகளை வியாழக்கிழமை (16 நவம்பர் 2023) வழங்கியது.
அந்த பொதிகளை விநியோகித்ததுடன், சமூக ஆதரவு மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில், பயனாளிகளுக்கு ஆரோக்கியமான மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தமை இந்த திட்டத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றது.
இத் திட்டத்தில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்கள் கலந்து கொண்டார்.