30th November 2023 10:14:02 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதியும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் பேரில் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படையினரால் தியத்தலாவ கஹகொல்ல மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (26 நவம்பர் 2023) பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி நியங்கொட மற்றும் கொழும்பு கோட்டை லயன்ஸ் கழகத்தினரால் இத் திட்டத்திற்கு அனுசரணை வழங்கப்பட்டது.
இந்த நன்கொடையானது கஹாகொல்ல மத்திய கல்லூரியில் கற்றலை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. நாளுக்கு மகிழ்ச்சியையும் பொழுதுபோக்கையும் சேர்க்கும் வகையில், மாணவர்களின் துடிப்பான நடன நிகழ்வு நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தது. மேலும், இப் பாடசாலையில் உள்ள சிறார்களுக்கு ஆரோக்கியமான மதிய உணவும் வழங்கப்பட்டன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு கோட்டை லயன்ஸ் கழக உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.