12th December 2023 18:45:03 Hours
02 டிசம்பர் 2023 அன்று போயகன விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷார யட்டிவல தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் விஜயபாகு காலாட் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அறிமுக உரையை நிகழ்த்தினார்.
பின்னர் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையரின் கடந்த கால திட்டங்களை மதிப்பாய்வு செய்ததுடன் சேவை வனிதையரின் திட்டங்கள் தொடர்பாகவும் மதிப்பீடு செய்தனர்.
இக் கூட்டத்தில், ரூ. 50,000/= பெறுமதியான சத்துணவு பொதியும் சிப்பாய் ஒருவரின் மகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
அமர்வு நிறைவடைந்த்தை தொடர்ந்து ஆளுமை விருத்தி விரிவுரையாளர் திருமதி.இரோஷிகா இந்துமினியின் ‘அறத்தை கட்டியெழுப்புதல் மற்றும் தனிப்பட்ட மேம்பாடு’ என்ற தலைப்பில் விளக்கமளிக்கும் சொற்பொழிவும் இடம்பெற்றது.