12th December 2023 18:51:01 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பிரிஸ் சேவை வனிதையர் உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) அத்திடிய 'மிஹிந்து செத் மெதுர'வில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த போர்வீரர்களை சந்திக்கும் நிமித்தம் விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த பெண்கள் 4 அடி வேலி சல்லடை சுருளைகள் மற்றும் ஒரு தானியங்கி வெளிப்புற டிபிபிரிலேட்டர் (தானியங்கி அதிர்வி பெட்டி) இயந்திரத்தை வழங்கினர்.
நிகழ்வில் சேவை வனிதையர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.