07th December 2023 18:50:54 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராணுவ வீரர்களின் 2983 பிள்ளைகளுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரக்கோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதுடன், விநியோக நிகழ்வு புதன்கிழமை (நவம்பர் 29) பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 24 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டது. மேலும், அரச பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற 2 மாணவர்களுக்கு ஒவ்வொரு தவணைக்கும் ரூ.12,500.00 வீதம் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.