07th December 2023 18:57:24 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் திரு.சுரங்க லியனகே மற்றும் திருமதி மயூரி லியனகே ஆகியோரின் அனுசரணையில் இராணுவ வீரர் ஒருவரின் மகளுக்கு ரூ. 63,850.00 பெறுமதியான சக்கர நாற்காலியை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 01) நன்கொடையாக வழங்கினர்.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் மூன்று மாதங்களுக்கு போதுமான பால் மா மற்றும் டயப்பர்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.