07th December 2023 19:02:17 Hours
கொமாண்டோ படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் புதன்கிழமை (நவம்பர் 29) பாங்கொல்ல ‘அபிமன்சல-3’ நல விடுதியில் வசிக்கும் போர் வீரர்களை பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினர்.
கொமாண்டோ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. நிமாலி ரணதுங்க அவர்கள் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் அவர்களுக்கு பரிசில்களை வழங்கியதுடன், அவர்களை இசையில் மகிழ்வித்து நல்வாழ்வை மேம்படுத்த ஆலோசணையும் வழங்கினர்.