06th December 2023 19:54:14 Hours
இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரவினால் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியில் சேவை செய்யும் சிவில் ஊழியர்களின் பாடசாலை செல்லும் 150 பிள்ளைகளுக்கு புத்தகம் வழங்கும் நன்கொடைத் திட்டம் சனிக்கிழமை (02 டிசம்பர் 2023) இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா அவர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்வில், தரம் 1 - 13 இல் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு சுமார் ரூ. 310,000/= பெறுமதியான 2100க்கும் மேற்பட்ட புத்தகங்கள், வழங்கப்பட்டன. அதற்கமைய 2024 ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு தேவையான புத்தகப் பொதிகளை 15 சம்ரதாயமாக பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.