26th September 2023 22:31:53 Hours
கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் 15 வது வருடாந்த பொதுக்கூட்டம் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (17 செப்டம்பர் 2023) இராணுவத் தலைமையக பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இவ்வமர்வில் கலந்துகொண்டதுடன் வரும் ஆண்டிற்கான புதிய செயற்குழுவும் நியமிக்கப்பட்டது.
இவ்வருடத்திற்கான மற்றும் 2024 ஆம் ஆண்டிற்க்கான கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் நலத் திட்டங்கள் இவ்வமர்வின் போது மதிப்பாய்வு செய்யப்பட்டன.