04th December 2023 18:56:07 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களின் மாதாந்த கூட்டம் இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (டிசம்பர் 01) இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முதலில் பாரம்பரிய மங்கல விளக்கு ஏற்றி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீதம் இசைக்கப்பட்டதையடுத்து வீரமரணமடைந்த போர் வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் திட்டங்கள் தொடர்பாக வீடியோ மூலம் விளக்கப்பட்டது.
பின்னர் மேஜர் டி. வர்ணகுலசூரிய, முந்தைய கூட்டத்தின் கூட்டறிக்கையினை வாசித்தார். பின்னர் கூடியிருந்த உறுப்பினர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் வரவுசெலவு கணக்குகளை பொருளாளர் மேஜர் பீஜீபீசீ குமாரி முன்வைத்தார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி லியனகே நன்றியுரையாற்றினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவில் முன்னெடுக்கப்படும் நலன்புரி திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கவசப் வாகன படையணி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமங்க பெர்னாண்டோ இராணுவ சேவை வனிதையர் பிரிவினருக்கு நிதி நன்கொடையை வழங்கினார். திருமதி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு, லான்ஸ் பொம்பார்டியர் டி.பி.டி இந்திக அவர்களின் குடும்பத்திற்கு வீடு நிர்மாண பணிக்கு 6 லட்ச ரூபாவும், பொம்பார்டியர் எஸ்.எஸ்.எச் குமாராவின் வீட்டின் எஞ்சிய கட்டுமானப் பணிகளை முடிப்பதற்காக 4.5 லட்சம் ரூபாவும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
பயங்கரவாதத் தாக்குதலில் மாலியில் 3 வது அமைதி காக்கும் பணியின் போது பாதி செவிபுலனை இழந்த சார்ஜன்ட் டி.ஜி.ஆர் சந்துருவன் அவர்களுக்கு செவிபுலன் கருவி வழங்கப்பட்டது.
திருமதி லியனகே அவர்களால் பொம்பார்டியர் டபிள்யூ.எம்.எஸ். ரத்நாயக்க அவர்களுக்கு தனது வீட்டின் எஞ்சிய நிர்மாணப் பணிகளை முடிப்பதற்கு 5 இலட்சம் ரூபாவும் மேலும், பொம்பார்டியர் எஸ்.எம்.எம் சேனாரத்னவுக்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக 1 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.
இராணுவ சமூகத்தை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில் குழு படம் எடுத்தலுடன் நிகழ்வு நிறைவுற்றது. நிகழ்ச்சி நிரலின்படி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்கள் வருமாறு:
பதில் உப தலைவர் மற்றும் செயலாளர் - திருமதி ஒமிலா ஜயவர்தன
உதவிச் செயலாளர் - திருமதி நந்தனி சமரக்கோன்
பொது தொடர்பு அதிகாரி - திருமதி. ஷயாமலி விஜேசேகர
உதவி பொது தொடர்பு அதிகாரி - திருமதி திலுபா பீரீஸ்
அனைத்து திட்ட மேற்பார்வை அதிகாரி - திருமதி ஷம்மி ஜயவர்தன