09th November 2023 21:10:37 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவு இலங்கை இராணுவ மருத்துவப் படையணியுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 29) இலங்கை இராணுவ மருத்துவப் படையணி குடும்பங்களைச் சேர்ந்த 46 தரம் 5 சாதனையாளர்களுக்கு பாராட்டு நிகழ்வை நடாத்தியது.
இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (வைத்தியர்) நில்மினி பெர்னாண்டோ அவர்களின் கருத்திற்கமைய இந் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி அவர்களின் கற்றல் திறன்களை அங்கீகரிப்பதாகவும், பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கான கொண்டாட்டமான பொழுதுபோக்குடன், தரம் 5ல் சாதனை படைத்த 46 மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி (வைத்தியர்) நில்மினி பெர்னாண்டோ, படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள்,பிள்ளைகளின் தாய்மார்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.