28th November 2023 09:48:10 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த விஜயம் 2023 நவம்பர் 23 கம்புருபிட்டிய ‘அபிமன்சல’ 2 நல விடுதியில் வசிக்கும் போர் வீரர்களின் நலம் விசாரிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டது.
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் தங்கள் விஜயத்தின் போது போர் வீரர்களுடன் உரையாடியதுடன் அவர்களின் நலம் பற்றி மட்டுமல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன் பற்றியும் விசாரித்தனர். இக் கலந்துரையாடலின் போது அவர்களின் அனுபவங்கள பகிர்ந்துகொள்ளப்பட்டதுடன் இதன் மூலம் அவர்களின் அக்கறை மற்றும் சொந்தம் பற்றிய உணர்வுகள் நன்கு வெளிப்படுத்தப்பட்டன.
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க அவர்கள் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி திருமதி நிலாந்தி வனசிங்கவுடன் இணைந்து ஒவ்வொரு போர்-வீரருக்கும் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதியினை வழங்கினார்.
பொதுபணி பணிப்பாளர் நாயகமும் இயந்திரவியல் காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ, நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்எம்எஸ்சீகே வனசிங்ஹ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.