28th November 2023 09:43:27 Hours
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து 'விருகெகுலு' பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், அவர்கள் அனைவரையும் நவம்பர் 25 அன்று மெனிங் டவுன் பாலர் பாடசாலை வளாகத்திற்கு அழைத்து அவர்களை கௌரவித்தனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் ஆலோசனையின் பேரில், படையினரின் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காக அவர்களால் ஆற்றப்படும் சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்துடன் இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் இராணுவ இசைக்குழு மற்றும் கலை நிகழ்ச்சி பணிப்பகத்தினரால் வழங்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் பாராட்டு விழாவிற்கு வண்ணம் சேர்த்தன. நிகழ்வின் இறுதியில் அனைத்து ஆசிரியைகளும் திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் மதிய உணவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதுடன் விசேட பரிசுப் பொதிகளையும் பெற்றுக்கொண்டனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.