27th November 2023 15:28:34 Hours
மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் சனிக்கிழமை (நவம்பர் 25) நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது, இந் நிகழ்விற்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பிரதம அதிதியை ஒரு சிறுமி தாம்பூலம் வழங்கி வரவேற்றதுடன், சிறப்பு விருந்தினர்கள் பாரம்பரிய மங்கல விளக்கு ஏற்றிய பின்னர் பிள்ளைகள் தங்கள் திறமைகளை அரங்கேற்றினர்.
இந்த நிகழ்வில் விறுவிறுப்பாக பங்களித்த சிறார்களின், நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பிள்ளைகள் நடனங்கள், நகைச்சுவை நிகழ்வுகள், வேடிக்கை பொழுபோக்கு அம்சங்கள் ஊடாக பார்வையாளர்களை மகிழ்ச்சி படுத்தினர்.
நிகழ்வின் இறுதியில் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் அனைத்து பாலர் பாடசாலை சிறார்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.
இராணுவ வழங்கல் கட்டளையின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.எ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என் மஹாவிதான கேஎஸ்பீ, சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி நந்தனி சமரகோன், திருமதி சுரங்கி அமரபால, சிரேஷ்ட அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.