27th November 2023 15:18:16 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) பல்லேகல இராணுவ மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சேவை வனிதையர் பிரிவின் சிற்றுண்டிச்சாலை மற்றும் சிகை அழங்கார நிலையம் ஆகியன திறந்து வைக்கப்பட்டன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இப் புதிய வசதிகளை படையினரும் அப்பகுதி பொதுமக்களுக்கும் மலிவு விலையில் பெற்றுகொள்ள முடியும்.
வரவேற்புக்குப் பின்னர் மத அனுஷ்டானங்களுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து நாடா வெட்டி புதிய வெகுப்பகம் மற்றும் சிற்றுண்டிச்சாலையை திறந்து வைத்தார். இப் புதிய கட்டிடம் சேவை வனிதையர் பிரிவினரால் ' நிறுவப்பட்டது.
அடுத்து, இராணுவத் தளபதி, சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் புதிய சேவை வனிதையர் பிரிவின் சிகை அழங்கார நிலையத்தை திறந்து வைத்து புதிய வசதிகளை பார்வையிட்டனர்.
இந் நிகழ்வில் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 111 வது காலாட் பிரிகேட் தளபதி, பல்லேகல இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர், சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.