Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th November 2023 12:56:08 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையரின் ஏற்பாட்டில் இசை நிகழ்வு

மன உறுதி மற்றும் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும் முயற்சியாக இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகம் மற்றும் 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு மிகவும் தேவையான தளர்வுகளை வழங்கும் முயற்சியில், இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையரினால் 11 நவம்பர் 2023 (சனிக்கிழமை) அன்று இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகரவினால் முன்மொழியப்பட்ட கருத்தின் அடிப்படையில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இசை குழு மற்றும் இலங்கை இராணுவ நடனக் குழுவின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மற்றும் திருமதி ஷியாமலி விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்றைய பிரதம அதிதி மற்றும் திருமதி விஜேசேகர ஆகியோர் இலங்கை இராணுவ மகளிர் படையணி நிலைய தளபதி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி ஆகியோரால் அன்புடன் வரவேற்கப்பட்டனர். இலங்கை இலேசாயுத காலாட் படையணி இசை குழு மற்றும் இலங்கை இராணுவ நடனக் குழு உறுப்பினர்களுக்கு பிரதம அதிதி விசேட பரிசில்களை வழங்கி வைத்தார். இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் பணியாளர்கள் மற்றும் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதஹித அறக்கட்டளை, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் அனுசரணை மற்றும் ஒத்துழைப்பினால், பிரதம அமைப்பாளர் திரு பிரசாத் லொகுபாலசூரியவின் ஒருங்கிணைப்பு மூலம் அந்த பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன.