23rd November 2023 08:37:22 Hours
கம்புருபிட்டிய ‘அபிமன்சல - 3’ இல் உள்ள போர்வீரர்களின் நலன் விசாரிப்பதற்காக இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவினரின் வருடாந்த விஜயம் சனிக்கிழமை (நவம்பர் 18) இடம்பெற்றது.
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவு மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே அவர்களின் மேற்பார்வையின் கீழ் இவ் விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து போர்வீரர்களுக்கும் சுவையான மதிய உணவு வழங்குவதற்கு முன் சுகாதார பொருட்கள் மற்றும் ரூபா 50,000/= பெறுமதியான மின்சாதன பொருட்கள் இந்த நல விடுதிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவினால் மேலும் 31 போர்வீரர்களுக்கு தலா ரூ. 4,500/= பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டது. போர்வீரர்களின் மன நலனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு இசை நிகழ்வு அன்றைய நிகழ்ச்சிகளை மேலும் வண்ணமையமாக்கியது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இந் நிகழ்வில் பங்குபற்றியதுடன் அவர்களுக்கு அனைவருக்கும் மறக்கமுடியாத நாளாக அமைந்தது.