17th November 2023 06:23:35 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் கீழ் சேவையாற்றும் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்ப பிள்ளைகளுக்கு ‘ரணவிரு அபிநந்தன பூஜை 2023’ என பெயரிடப்பட்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
அதன்படி, படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் 57 பிள்ளைகள் பாடசாலை உபகரண பொதிகளைப் பெற்றனர். ரூபா 20, 000/= க்கு பெறுமதியான இப் பொதிகள் சனிக்கிழமை (நவம்பர் 11) பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது வினியோகிக்கப்பட்டன.
அதஹித அறக்கட்டளை, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் அனுசரணை மற்றும் ஒத்துழைப்பினால், பிரதம அமைப்பாளர் திரு பிரசாத் லொகுபாலசூரியவின் ஒருங்கிணைப்பு மூலம் மாணவர்கள் அந்த ஊக்குவிப்பு பொதிகளை பெற்றுகொண்டனர். இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷயாமலி விஜேசேகர அவர்களால் முன்மொழியப்பட்ட கருத்திற்கமைய அதஹித அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஆதரவு மற்றும் பங்களிப்பு வழங்கிய நன்கொடையாளர்கள், இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷயாமலி விஜேசேகர, பிரதி தலைவி திருமதி இந்துநில் ஜயக்கொடி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
படையணியின் படைத் தளபதி, இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, அதஹித அறக்கட்டளையின் பிரதம அமைப்பாளர் திரு பிரசாத் லொகுபாலசூரிய, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.