12th November 2023 11:36:37 Hours
இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் முதலாவது கூட்டம் நவம்பர் 05 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை இராணுவ சேவை படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி சந்திரிகா ராஜபக்ஷ அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதலாவது கூட்டம் இதுவாகும்.
புதிய முன்னோக்குகள் மற்றும் யோசனைகளுக்கு அமைய நியமனங்களுடன் கூட்டம் தொடங்கியது.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக எதிர்வரும் காலங்களில் மேற்கொள்யப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், தலைவி தமது வேலைத்திட்டங்களை நேரடியாக கண்காணிக்கும் வகையில் படையணியின் யோகர்ட் உற்பத்தியை பார்வையிட்டார்.
இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்பு, பிரிவின் நோக்கங்களை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சியைக் குறிக்கிறது.