14th November 2023 22:46:48 Hours
பனாகொட 'விருகெகுலு' பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நவம்பர் 13 ஆம் திகதி (திங்கட்கிழமை) இலங்கை இலேசாயுத காலாட் படையணி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் கலந்து கொண்டார்.
பிரதம அதிதியை சிறுமி ஒருவர் தாம்பூலம் வழங்கி வரவேற்றதுடன், கலந்து கொண்ட அதிதிகள் மங்கல விளக்கை ஏற்றி பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பிள்ளைகள் நடனங்கள், வேடிக்கையான செயற்பாடுகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்வுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்வூட்டினர்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, பனாகொட 'விருகெகுலு' பாலர் பாடசாலைக்கு பொறுப்பான திருமதி திலுபா பீரிஸ், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாலர் பாடசாலை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்