10th November 2023 22:19:40 Hours
இராணுவ புலனாய்வு படையணியின் சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த அன்னதானத் திட்டத்தை அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் சனிக்கிழமை (ஒக்டோபர் 28) அன்று இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரான திருமதி மனோரி ரணவீர அவர்களால் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், இத் திட்டத்தின் கீழ் 18 முதியவர்களுக்கு அன்றைய 3 வேளை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.