08th November 2023 22:46:18 Hours
விசேட படையணியின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் கர்பிணி துனைவியர்களுக்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமான அடிப்படை மகப்பேறு அத்தியாவசிய பொருட்கள் பிரபல தொழிலதிபர் திரு. சஞ்சய விதானகே அவர்களின் அனுசரணையில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியான திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.
திரு. சஞ்சய விதானகே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை நாவுல விசேட படையணி தலைமையகத்தில் விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி அன்புடன் வரவேற்று விநியோகம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். .
இந்த நிகழ்வு விசேட படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஆர்.பீ.எஸ் பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, விசேட படையணியின் நிலைய தளபதி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.
விசேட படையணியின் படைத் தளபதி திரு.சஞ்சய விதானகே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர்களது பெருந்தன்மைக்காக பாராட்டி பாராட்டு சின்னம் வழங்கியதுடன் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஞ்சய விதானகே மற்றும் திருமதி சுரங்கி டி சில்வா ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு சின்னத்தை வழங்கினார். படையணி தலைமையக கட்டளை அதிகாரி லெப்டின்ன் கேணல் எஸ் ஆர் பெணான்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்தார்.