09th November 2023 21:02:16 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் நிர்வகிக்கப்படும் இப்பலோகம பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா திங்கட்கிழமை (நவம்பர் 6) கெக்கிராவ மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இப்பலோகம 'விருகெகுலு' பாலர் பாடசாலை நிர்வாகத்திற்கு பொறுப்பான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் திருமதி நிலுகா நாணயக்கார அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாலர் பாடசாலையின் சிறுமி ஒருவர் பிரதம அதிதிக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றதுடன், விசேட அழைப்பாளர்கள் மங்கழ விளக்கை ஏற்றி சிறார்களின் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். அந்தச் சிறுவர்கள் தங்கள் நடனத் திறமைகளை வெளிப்படுத்தியதோடு, வேடிக்கை மற்றும் நகைச்சுவை நிகழ்வுகளால் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ, 21 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஐ.ஏ.என்.பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்வை கண்டு களித்தனர்.