07th November 2023 20:33:43 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இராணுவ புலனாய்வு படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் இராணுவ புலனாய்வு படையணி குடும்பத்தை சேர்ந்த 44 சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 24) கரந்தெனிய இராணுவ புலனாய்வு படையணியில் முன்னெடுக்கப்பட்டது.
இத் திட்டமானது இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.சீ.ஆர் ஜயசூரிய ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் ஆசிர்வாதத்துடன் இராணுவ புலனாய்வு படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ரஜிதா ஜயசூரிய அவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 5 மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக தலா ரூ.2000/= (மொத்தம் ரூ. 10,000/=) வழங்கப்பட்டது.
மேலும், அதே சந்தர்ப்பத்தில் க.பொ.த சா/த மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு நிதி உதவியாக ரூபா முறையே 15,000/= மற்றும் 20,000/= வழங்கப்பட்டது.
இரண்டு மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு ரூ. 32,500/= மதிப்புள்ள இலங்கை வங்கியின் சேமிப்புக் கணக்குகள் பரிசாக வழங்கப்பட்டன.
இராணுவ புலனாய்வு படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.