07th November 2023 20:39:02 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் 8 வது கெமுனு ஹேவா படையணியின் ஆதரவுடன் ஞாயிற்றுக்கிழமை (29) பெல்மடுள்ள 'மிதுருமிதுரோ' சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
8 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் ஆதரவுடன் கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் பல வேடிக்கையான நிகழ்வுகளும், பாடசாலை உபகரண பொருட்களும் சிறார்களுக்கு பரிசளிக்கப்பட்டன.
நிகழ்வின் முடிவில், அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன, அவர்கள் அனைவரும் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கு சிறப்பு மதிய விருந்தும் வழங்கப்பட்டது.