Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

08th November 2023 10:21:31 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பாரம்பரிய மங்கல விளக்கு ஏற்றி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீதம் இசைக்கப்பட்டதையடுத்து வீரமரணமடைந்த போர் வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியன. இராணுவ நடனக் குழுவினரின் நடனத்தால் நிகழ்ச்சி அலங்கரிக்கப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் திட்டங்கள் தொடர்பாக வீடியோ மூலம் விளக்கப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிர்வாக செயலாளர் கெப்டன் எம்.என்.டபிள்யூ நிமாஷா அவர்கள் முன்னைய கூட்டத்தின் அறிக்கைகளை வாசித்ததுடன், பிரிவின் பொருளாளர் மேஜர் பீ.ஜி.பீ.சி. குமாரி அவர்களினால் வரவு-செலவு மற்றும் கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் உறுப்பினர்களுக்கு உரையாற்றியதுடன் செயற்பாட்டில் உள்ள நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

இச்சந்திப்பில் கருணை மற்றும் ஆதரவை வெளிப்படுத்துவதாக இலங்கை சமிக்ஞைப் படையணியின் இராணுவ சிப்பாய் ஒருவரின் தாய்க்கு செவிப்புலன் கருவி நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் இராணுவ சிப்பாய் ஒருவரின் வாழ்க்கைத் துணைக்கு தையல் இயந்திரம் பரிசாக வழங்கப்பட்டது.

சமூக உணர்வை உயர்த்தும் வகையில், பிரதம அதிதியான திருமதி லியனகே அவர்கள் இராணுவ அதிகாரியின் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை முடிக்க ரூ. 6 இலட்சம் மற்றும் ரூ. 4.5 இலட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

இராணுவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், ஒரு குழுப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.