04th November 2023 22:47:46 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவினர் அனுசரணையாளர்களின் உதவியுடன் 2021 இல் மறைந்த சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் குடும்பத்திற்கு புதிய குளியலறை வசதி, ஒரு ஆழ்குழாய் தண்ணீர் பம்ப் மற்றும் 1000 லிட்டர் நீர் தொட்டி உட்பட ஒரு குழாய் கிணறு போன்ற வசதிகளை அமைத்து கொடுத்தனர்.
வரக்காபொல பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் 05 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் தேவை இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ரஜிதா ஜயசூரிய அவர்கள் அத்தேவையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினார்.
இராணுவப் புலனாய்வுப் படையணி தலைமையகத்தின் உதவியுடன், 5 வது இராணுவப் புலனாய்வுப் படையினர், தமது படையணியின் மேஜர் பிகேஎன்எம் ககுலாவல அவர்களின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டத்தை மேற்கொண்டனர்.
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பின் மூலம் நன்கொடையாளர்கள் குழுவினால் சுமார் ரூ.400,000.00 பண உதவியை கிடைக்கப்பெற்றது. மேஜர் பிகேஎன்எம் ககுலாவல அவர்களினால் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 10) இத்திட்டம் நிறைவு செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டது.