04th November 2023 22:52:01 Hours
மின்னேரிய ‘விருகெகுலு’ சிறுவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தும் வருடாந்த கலை விழா வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 03) கிரிதலேகம மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மின்னேரிய ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான இராணுவ சேவை வனிதையர் பிரிவின் திருமதி ருவீனா மெத்தானந்த அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாலர் பாடசாலையின் சிறுமி ஒருவரினால் பிரதம அதிதிக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்கப்பட்டதுடன், பாரம்பரிய மங்கல விளக்கு ஏற்றி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் பிள்ளைகள் தங்கள் திறமைகள் மற்றும் அழகியல் திறன்களை அரங்கேற்றினர்.
நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பிள்ளைகள் நடனங்கள், நகைச்சுவை நிகழ்வுகள், வேடிக்கை பொழுபோக்கு அம்சங்கள் ஊடாக பார்வையாளர்களை மகிழ்ச்சி படுத்தினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் திருமதி ருவீனா மெத்தானந்த அவர்கள் கைதட்டல்களின் மத்தியில் திறமைகளை வெளிப்படுத்திய பிள்ளைகளுக்கு பரிசில்களை வழங்கினார்.
கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டபிள்யூடிசீ மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், பாலர் பாடசாலை ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.