02nd November 2023 20:08:45 Hours
பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் திங்கட்கிழமை (ஒக்டோபர் 23) கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவ நிபுணரான கெப்டன் (வைத்தியர்) எல்ஏடிஜி சந்திரசிறி அவர்கள் ‘மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்’ என்ற தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தினார்.
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர அவர்களின் அழைப்பு மற்றும் வழிகாட்டுதலில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விரிவுரையில் கலந்து கொண்டனர்.
வைத்தியர் சந்திரசிறி அவர்கள் தனது நிபுணத்துவம் மூலம் பெண்களின் ஆரோக்கியம், மார்பகம், கர்ப்பப்பை, புற்றுநோய் பற்றிய பிரச்சினைகளை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்ளும் வகையில் விரிவுரையை நடாத்தினார்.