02nd November 2023 20:31:17 Hours
காலி விரு கெகுலு பாலர் பாடசாலையின் சிறுவர்களின் வருடாந்த கலை விழா 2023 ஒக்டோபர் 31 அன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன் போது பாலர் பாடசாலையின் சிறுமி ஒருவர் பிரதம அதிதியை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின், சிறப்பு அழைப்பாளர்கள் மங்கல விளக்கை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
காலி விரு கெகுலு பாலர் பாடசாலையின் சிறார்கள், பல விளையாட்டுத் திறன்கள், கேளிக்கைகளை உருவாக்குதல் மற்றும் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த தொடர் விடயங்கள் கலந்துகொண்டவர்களைக் கவர்ந்தன.
நிகழ்வின் நிறைவில் திருமதி ஜானகி லியனகே தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கான பரிசுகளை வழங்கினார்.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எ.ஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ,காலி ‘விரு கெகுலு’ பாலர் பாடசாலையின் பொறுப்பாளர் திருமதி சௌமியா ரணசிங்க,சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என் மகாவித்தான கேஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாலர் பாடசாலை ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.