30th October 2023 22:35:37 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால் சனிக்கிழமை (ஒக்டோபர் 21) நெலும்பொகுண திரையரங்கில் எவர்கிரீன்ஸ் ஒப் 70' எனும் ரெட்ரோ இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டது.
வீரமரணம் அடைந்த போர்வீரர்கள், மாற்றுத்திறனாளி போர்வீரர்கள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் குடும்பங்களின் நலனுக்காக நிதி திரட்டும் பொருட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த மாபெரும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷம்மி ஜயவர்தன சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பொறியியல் படையணி தலைமையகத்தில் உள்ள அனைவரின் ஆதரவுடன் திட்டத்தை ஏற்பாடு செய்வதில் முன்னிலை வகித்தார்.
சந்திமால் பெர்னாண்டோவின் இசைக்குழு உறுப்பினர்களால் 1970களில் இருந்து இலங்கையின் இசைத்துறையைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் 16 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு இசை விங்கப்பட்டது. சந்தன விக்கிரமசிங்கவின் நடனக் குழு நிகழ்வுக்கு வண்ணம் சேர்த்தது.