30th October 2023 22:40:39 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணி 80வது ஆண்டு நிறைவு மற்றும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை சமிக்ஞைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) இலங்கை சமிக்ஞைப் படையணி குடும்ப மாணவர்களின் நலனுக்காக மாபெரும் நலன்புரித் திட்டத்தை முன்னெடுத்தது.
9 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்திற்கான பிரிண்ட் எக்ஸ்செல் தனியார் நிறுவனம், நலன் விரும்பிகள் மற்றும் இலங்கை சமிக்ஞைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் நிதியுதவி வழங்கப்பட்டது.
இலங்கை சமிக்ஞைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நளினி ரத்நாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 112 மாணவர்களுக்கு அந்த பரிசுகளை வழங்கினார்.
இத் திட்டத்தின் கீழ் தரம் 1 முதல் தரம் 12 வரை கற்கும் மாணவர்கின் எதிர்கால கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை உபகரணங்களுடன் ஊக்கு தொகைகளையும் வழங்கப்பட்டன. அவர்களில் 1999 ஆம் ஆண்டு மன்னார் பிரதேசத்தில் சேவையாற்றிய 3 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் போர்வீரரின் மகளான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 3ஆம் ஆண்டு மருத்துவ மாணவிக்கு பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும் வரை மாதாந்த புலமைப்பரிசில் ரூ. 10,000/= வழங்கப்பட்டது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மேலதிகமாக பாடசாலை உபகரணங்களையும் எழுதும் புத்தகங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, ஆங்கில மொழித் துறையில் அந்த சிறார்களுக்கு கல்வி கற்பதற்கு மொபைல் தளத்தை வழங்கும் நோக்கத்துடன் ‘தக்சலாவ’ என்ற இணையம் மற்றும் மொபைல் செயலி அறிமுகப்படுத்தியது. அன்றைய பிரதம அதிதி திருமதி ஜானகி லியனகே அவர்கள் அடையாள கையொப்பமிட்டு கைபேசி செயலியை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வின் முடிவில், திட்டத்திற்கு பங்களித்தவர்கள் மற்றும் 'தக்சலாவ' மொபைல் தளத்தை தயாரித்தவர்கள் பாராட்டப்பட்டதுடன் அங்கீகார சான்றிதழ்களையும் பெற்றனர்.
பல்வேறு கட்டங்களில் உள்ள இத்திட்டமானது இலங்கை சமிக்ஞைப் படையணி குடும்பங்களைச் சேர்ந்த 2,700க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு அந்தச் சலுகைகள் கிடைக்கும். இந் நிகழ்வில், 112 மாணவர்களைக் கொண்ட பிரதிநிதி குழு அந்த சலுகைகளையும் ஊக்கத்தொகைகளையும் அடையாளமாகப் பெற்றனர்.
இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எ.டபிள்யூ.எஸ் ரத்நாயக்க என்டியூ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பிரின்டெக்சல் பிரய்வட் லிமிட்ட் இன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.ஷனில் செனரத், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.