26th October 2023 07:13:51 Hours
இலங்கை பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (ஒக்டோபர் 21) நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது, இரத்மலானை இலங்கை செவி மற்றும் விழி புலனற்ற பாடசாலையின் 90 பிள்ளைகளுக்கு உணவு, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பரசுப்பொதிகள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டலின் பேரில், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பிள்ளைகளின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதற்காக மதிய உணவு மற்றும் பொழுதுபோக்கான நிகழ்ச்சியுடன் அனைத்தும் நிறைவுற்றன. இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.