21st October 2023 07:27:38 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 2023 ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு செவிப்புலன் மற்றும் மருத்துவ உதவிகள், நவீன கழுவும் அறை பாகங்கள், பாடசாலை தேவைகள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஆகியவற்றைப் வழங்கினர்.
இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்களின் ஆலோசனையின் பேரில், பனாகொடையில் உள்ள இராணுவ சேவைப் படையணி தலைமையக மையத்தில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்படி, இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 15 உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்கு மருந்துகள், அவர்களின் ஊட்டச்சத்துக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உலர் உணவுகள் மற்றும் பால் மா பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
விநியோக நிகழ்வின் பிரதம அதிதியாக இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கலந்து கொண்டார். இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.