20th October 2023 10:12:49 Hours
தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பதாரர்களைத் தயார்படுத்தும் நோக்கில் ஒரு புதிய திட்டமான 'பஹாடபஹக்' திட்டம் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைமையில் சனிக்கிழமை (23 செப்டம்பர் 2023) பனாகொடையில் உள்ள பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் தொடங்கப்பட்டது.
பொறியியல் சேவைகள் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் 100 தரம் 5 மாணவர்களிடையே பரீட்சை சார்ந்த மாதிரித் தாள்கள் வழங்கப்பட்டன. பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் திரு.பிரசாத் லொகுபாலசூரியவின் அனுசரணையுடன் இந்த முயற்சி இடம்பெற்றது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு, பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுரங்கி அமரபால அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சனிக்கிழமை (07 ஒக்டோபர் 2023) பொறியியல் சேவைகள் படையணியை சேர்ந்த இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறுவர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் வேடிக்கையான விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகள் காணப்பட்டதுடன் அதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பரிசுகளைப் பெற்றனர்.
அதே பிற்பகல், மாணவர்களுக்கு சுவையான மதிய உணவு பரிமாறப்படுவதற்கு முன், பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காக ஒரு இசை நிகழ்வு நடைபெற்றது.