Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

20th October 2023 10:22:18 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் போர் வீரர் மற்றும் குடும்பங்களுக்கு உதவி

இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைய இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உத்பலா ஹெட்டியாராச்சி அவர்கள் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இறந்த மற்றும் சேவை செய்யும் போர்வீரர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தார்.

இந் நிகழ்வு சனிக்கிழமை (14 ஒக்டோபர் 2023) இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் அவர்களின் சிறந்த திறமைகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியான மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 20,000.00 பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு முதல் மாதத்திற்கு ரூ. 10,000 மற்றும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரூ. 20,000 பெறுமதியான நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதியுதவி சவாலான காலங்களில் இந்தக் குடும்பங்களின் சுமைகளை சந்தேகத்திற்கு இடமின்றி எளிதாக்கியது.

புலமைப்பரிசில் நிகழ்ச்சியின் போது, டாக்டர் ரம்மி ரூபன் அவர்களால் "இன்டர்பர்சனல் தெரபி" பற்றிய விரிவுரை நிகழ்த்தப்பட்டது. இந்த அமர்வு ஆரோக்கியமான உறவுகளை வளர்ப்பதற்கும், அன்றைய நிகழ்ச்சித்திட்டத்தை மேம்படுத்தும் அதே வேளையில், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் மதிப்புமிக்க அறிவையும் வழிகாட்டுதலையும் வழங்கியது.