Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

18th October 2023 21:17:46 Hours

சேவை வனிதையரின் வருடாந்த பொதுக் கூட்டம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 39 வது வருடாந்த பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 16) இராணுவ தலைமையகத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

அனைத்து படையணிகளின் சேவை வனிதையர் பிரிவின் தலைவிகள் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சேவை வனிதையர் கீதம் இசைக்கப்பட்டது.

கூட்டத்தின் போது, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி கீழே குறிப்பிட்டுள்ளபடி, செயற்குழுவில் இடைவெளியாக உள்ள அலுவலகப் பணியாளர்களின் பதவிகளை நிரப்ப சிரேஷ்ட உறுப்பினர்களை நியமித்தார்.

- உதவிச் செயலாளர்: திருமதி ஒமிலா ஜயவர்தன

- மக்கள் தொடர்பு அதிகாரி: திருமதி நந்தனி சமரக்கோன்

- உதவி மக்கள் தொடர்பு அதிகாரி: திருமதி ஷியாமலி விஜேசேகர

- திட்டப் பொறுப்பாளர் : திருமதி திலுபபீரிஸ்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய தலைவி, கூட்டத்தில் உரையாற்றினார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிறைவேற்றுச் செயலாளர் மேஜர் எச்.வன்னியாராச்சி முன்னைய கூட்டத்தின் அறிக்கைகளை சமர்ப்பித்தார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பீ.குமாரி வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு அறிக்கைகள் மற்றும் செலவு விவரங்களை சமர்பித்தார்.

இந்தச் சந்திப்பின் போது நிறைவேற்று சபையின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தலைவி பெற்றுக்கொண்டார்.

மேலும், லான்ஸ் கோப்ரல் எச்.எம்.கே.எல்.கே ஹேரத்தின் செவித்திறன் குறைபாடுள்ள மகளுக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன. 9 வது பொறியியல் சேவை படையணியின் உயிரிழந்த போர் வீரரின் மனைவியால் நிர்வகிக்கப்படும் சுயதொழிலுக்கு ஆதரவாக ஜூகி தையல் இயந்திரத்தையும் தலைவி அன்பளிப்பு செய்தார்.

பேராசிரியை ஹேமமாலி குணதிலக்க அவர்கள் தனி நிகழ்ச்சியாக ‘பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்’ என்ற தலைப்பில் சரியான விரிவுரையை நிகழ்த்தினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் கூட்டம் நிறைவுற்றது, அதைத் தொடர்ந்து சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவரும் சிற்றுண்டியுடன் சிநேகபூர்வ உரையாடலையும் மேற்கொண்டனர். பின்னர் குழு படம் எடுத்துக் கொண்டனர்.