Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th October 2023 23:17:52 Hours

போர் கருவி படையணி சேவை வனிதையரால் சீலாவதி அன்னை முதியோர் இல்லத்திற்கு தானம்

இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரின் நிகழ்ச்சி திட்டத்துடன் இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இராணுவ உபகரண தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் வெயங்கொடை சீலாவதி அன்னை ஞாபகார்த்த முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு திங்கட்கிழமை (செப்டெம்பர் 25) சமய நிகழ்வினை வழங்க ஏற்பாடு செய்தனர்.

இந்த முயற்சியானது இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பாந்துனி மாக்ரெட் ரணசின் ரணவக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வு இராணுவ போர் கருவி படையணி படைத் தளபதி, தளபதி, நிலைய தளபதி ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்டது.

இந் நிகழ்வில் திருமதி ரேணுகா ஜயரத்ன, மற்றும் இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வானது அர்த்தமுள்ள மற்றும் பாரம்பரிய தான நிகழ்வுடன் ஆரம்பமானது. நிகழ்வின் முதல் பகுதியாக, இராணுவ உபகரண தொழிற்சாலையின் படையினர் முதியோர் இல்ல வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தேரர்களுக்கு தானம் வழங்குவதைத் தொடர்ந்து முதியோர்கள் ‘புத்த பூஜை’யில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன.

இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் இந்த தானம் வழங்குவதில் பங்கேற்றனர். பின்னர் வண.தேரர்கள் இராணுவ போர் கருவி படையணி படைத் தளபதி மற்றும் இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோர்களுக்கும் எதிர்கால முயற்சிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து இராணுவ போர் கருவி படையணி உறுப்பினர்களுக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினர். அதைத் தொடர்ந்து, இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் முதியோர்களுக்கு உணவை வழங்கினர். மேலும் அத்தியாவசிய சுகாதார பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதிகளையும் வழங்கினர்.