12th October 2023 23:41:15 Hours
74 வது இராணுவ ஆண்டு நிறைவ தினத்தை முன்னிட்டு இராணுவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சி புதன்கிழமை (ஒக்டோபர் 11) இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் தொடங்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளடக்கிய 122 பரிசுப் பொதிகளை வழங்கினார்.
இத் திட்டத்தில் இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களின் மாணவர்கள் பயனடைந்தவர்களில் அடங்குவர். இந் நிகழ்வில் இரண்டு சிறுவர்கள் தாம்பூலம் வழங்கி பிரதம அதிதி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடன் சேவை வனிதையர் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களை வளாகத்தில் வேற்றனர்.
பாரம்பரிய மங்கள விளக்கற்றப்பட்டு சேவை வனிதையர் பிரிவின் கீதம் இசைக்கப்பட்டதுடன், வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் அதே சந்தர்ப்பத்தில் இலங்கை வங்கியிடமிருந்து சிறுவர் வங்கி சேமிப்புக் கணக்கைப் பெற்றனர்.
இதேவேளை, இலங்கை இராணுவ சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வனிகசேகர அவர்களின் திட்டங்களுக்குப் பதிலாக ஈவுத்தொகை காசோலையையும் ஊக்கத்தொகையாக இரண்டு யோகட் சீலர்களையும் பெற்றுக்கொண்டார்.
மேலும், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சார்ஜன்ட் மேஜர் ஒருவருக்கு அவரது விசேட தேவையுடைய குழந்தைக்கு மிகவும் தேவையான சுகாதார வசதிகளை நிர்மாணிப்பதற்கு ஆதரவாக ரூபா 200,000/= பண நன்கொடை வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் சேவை வனிதையர் பிரிவின் ஊக்கத்தொகைக்கு பயனாளி ஒருவர் நன்றியுரையை தெரிவித்தார்.
பிரதி பதிவி நிலை பிரதானி, உபகரண மாஸ்டர் ஜெனரல், வழங்கல் மாஸ்டர் ஜெனரல், இராணுவச் செயலாளர், பல சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் பிரிவின் தலைவர்கள், சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சேவை வனிதையர் பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சிப்பாய்கள் இந் விநியோக நிகழ்வில் கலந்து கொண்டனர்.