08th October 2023 22:27:59 Hours
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையில் வியாழக்கிழமை (05 ஒக்டோபர் 2023) இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அனுசரணையின் கீழ் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வருகை தந்த பிரதம அதிதியை வெற்றிலை வழங்கி சிறுவர்கள் அன்புடன் வரவேற்றதுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. பாடசாலையின் சிறுவர்கள் பல வண்ணமயமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். நிகழ்ச்சி நிறைவில் திருமதி ஜானகி லியனகே அவர்கள் ஒவ்வொரு பிள்ளைக்கும் பாடசாலை உபகரணங்களை பரிசாக வழங்கியதுடன், பாலர் பாடசாலையின் மாணவர் ஒருவரால் மனதைத் தொடும் வகையில் தலைவிக்கு மாங்கன்று ஒன்று வழங்கப்பட்டது.
பாலர் பாடசாலை சார்பாக பிள்ளை ஒருவரினால் நன்றியுரை ஆற்றப்பட்டது. திருமதி ஜானகி லியனகே அவர்களுடனான குழுப்படத்துடன் இந்நிகழ்ச்சிகள் முடிவடைந்ததுடன், இறுதியில் தேநீர் விருந்தில் தலைவி அவர்கள் பிள்ளைகள், முன்பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அவர்களின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த சிறப்பு நிகழ்வில் இராணுவ வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, அவர் தம் பாரியார் திருமதி நந்தனி சமரகோன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைபு பிரிகேடியர் என் மஹாவிதான கேஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், அர்ப்பணிப்புள்ள பாலர் பாடசாலை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.