07th September 2023 17:44:47 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையரால் இலங்கை பீரங்கி படையணியின் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு உதவிகள் மற்றும் நிவாரணப் பொதிகளும் ஐந்து சக்கர நாற்காலிகளும் அத்தியாவசிய பொருட்களும் சிற்றுண்டி பொதிகளையும் வழங்கும் நிகழ்வு இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாமா வனசிங்க அவர்களால் பனாகொடை இலங்கை பீரங்கி படையணியில் வைத்து வழங்கப்பட்டது.
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையரின் வேண்டுகோளுக்கு இணங்க சேட்டிஸ் லங்கா நிறுவனத்தினர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். அதற்கமைய பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாமா வனசிங்க அவர்கள் உறுப்பினர்களுடன் இந்த விநியோகத் திட்டத்தில் இணைந்து கொண்டார். இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எ.எஸ்.எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.