06th October 2023 23:24:18 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் மின்னேரியா விருகெகுலு பாலர் பாடசாலையின் 86 சிறுவர்கள் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 2) தேநீர் விருந்துபசாரம் மற்றும் இசை நிகழ்வுடன் கொண்டாடினர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் ஆலோசனையில் திருமதி ருவீனா மெத்தானந்த அவர்கள் உறுப்பினர்களுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
பிள்ளைகள் வண்ணமயமான ஆடைகளை அணிந்து தங்கள் கலைத்திறன் மற்றும் இசை திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் பாலர் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கினார்கள். மேலும், பிள்ளைகளினால் உருவாக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான கைவினைப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ,டி.சீ மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.