Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

01st October 2023 19:02:15 Hours

இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையரின் வருடாந்த கூட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி

இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த கூட்டம் சனிக்கிழமை (செப். 23) அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் நடைபெற்றதுடன், இக் கூட்டத்தின் போது மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கப்பட்டது.

பிரதம அதிதியாக வருகை தந்த இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன அவர்களை இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர்.

அன்றைய நிகழ்ச்சியின் முதற்கட்டமாக உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் ஈஏஏஎஸ் சமிந்த அவர்கள் பார்வையாளர்களுக்கு ‘ஒரு போர்வீரனின் மனைவியின் பங்கு’ என்ற தலைப்பில் விரிவுரை நடாத்தினார்.

இலங்கை சிங்கப் படையணியினால் அதிகாரவாணையற்ற அதிகாரியின் பிள்ளைக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 100,000.00வும் மற்றொரு இராணுவ வீரருக்கு அவரது மருத்துவ சிகிச்சைக்காக ரூ.50,000.00 வும், பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர்ந்து வரும் சிவில் ஊழியர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு அவரது படிப்புக்காக புதிய மடிக்கணினியும் வழங்கப்பட்டது.

இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவிற்கு புதிய குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதுடன், பங்கேற்பாளர்கள் அனைவரும் தலைவியிடமிருந்து பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர். இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.