04th October 2023 06:44:31 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் 34 பெண் நோயாளிகள் மற்றும் அதன் ஊழியர்களுக்கான விசேட மனநல நிகழ்ச்சித்திட்டத்தை முல்லேரியாவிலுள்ள தேசிய மனநல நிறுவகத்தின் விடுதி எண் 05 இல் செவ்வாய்கிழமை (செப்டெம்பர் 26) ஏற்பாடு செய்தனர்.
இந்த திட்டம் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலன்களை சேவை வனிதையர் பிரிவின் தலைவி நலன் விசாரித்த்துடன் சில பரிசுப் பொதிகளையும் வழங்கினார். மேலும், சேவை வனிதையர் பிரிவினரால் சிறப்பான இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததுடன் அவர்களுக்கு மாலை தேநீர் விருந்தும் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் கீழ், இராணுவ சேவை வனிதையரால் பராமரிக்கப்படும் விடுதி எண். 5 இன் நீர் சேமிப்புத் தொட்டி மற்றும் சேதமடைந்த இடங்களை பொறியியல் சேவை படையணியின் படையினரால் புனரமைக்கப்பட்டது. மேலும், அடிப்படைத் தேவைகள் அடங்கிய பரிசுப் பொதிகளும் நோயாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.