03rd October 2023 00:03:34 Hours
எதிர்வரும் சிறுவர் தினத்தை ஒட்டி, இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின்தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்கள் தனது உறுப்பினர்களுடன் இணைந்து இராணுவ குடும்பங்களின்பிள்ளைகளின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 'கலைப் போட்டி - 2023' ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்ஏ உடரட்டகே, இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினரான திருமதி சந்திமா உடரட்டகே ஆகியோரால் இந்த திட்டம் மேற்பார்வை செய்யப்பட்டது, இதில் தரம் 1-5, தரம் 6-9 மற்றும் தரம் 10-13 மாணவர்கள் பங்களித்தனர். 100க்கும் மேற்பட்ட உயர்தரத்திலான சித்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இது சனிக்கிழமை (செப்டம்பர் 23) 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி துஷாரி வணிகசேகர கலந்து கொண்டார். அவர்களின் பங்கேற்பைப் பாராட்டி, போட்டிக்கு ஆக்கப்பூர்வமான ஓவியங்களைச் சமர்ப்பித்த ஒவ்வொருவருக்கும் பாடசலைப் பைகள் மற்றும் டிஎஸ்ஐ பரிசு வவுச்சர்களும் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர்ஏ உடரட்டகே, சிரேஷ்ட அதிகாரிகள், பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.