03rd October 2023 21:29:17 Hours
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதைர் பிரிவினால் செவ்வாய்க்கிழமை (26 செப்டம்பர் 2023) பலாங்கொடை நொன்பேரில் (Nonpareil) தோட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தா பாடசாலையில் சிறுவர்களுக்கு நிவாரணப் பொதிகள் மற்றும் மதிய உணவு வழங்கியதுடன், பொழுதுபோக்கான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதைர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்கள் சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செயதார்.
கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதைர் பிரிவினால் இத்திகதிக்கு முன்னர் பாடசாலை பிள்ளைகளின் அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஒரு நூலகத்தை அமைத்தது நூலகத்திற்கு தேவையான புத்தகங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
பிள்ளைகள் அன்றைய நாளை விளையாட்டுகளிலும் மற்றும் வேடிக்கையான அம்சங்களிலும் களித்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுப் பொதிகளும் இச்சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டதுடன், ஆடம்பரமான மதிய உணவுடன் நிகழ்ச்சிகள் முடிவுற்றன. இச்சந்தர்ப்பத்தில் கெமுனு ஹேவா படையணியில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் இரண்டு பிள்ளைகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கியதுடன், இராணுவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.