03rd October 2023 00:14:55 Hours
இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் ‘சௌபாக்ய கைவினைப்பொருட்கள் வர்த்தக கண்காட்சி’ 2023 செப்டெம்பர் 22-24 ம் திகதிகளில் பனாகொட போதிராஜாராம பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகரவின் கருத்திற்கமைய சேவை வனிதையர் பெண்கள் மத்தியில் கைவினைப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வு இராணுவத்தினரின் துணைவியர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகளை வழங்குவதாகும். அவர்கள் தங்களின் கைவினைப் பொருட்களை நிதியுதவி செய்யும் முகவர்களுக்குக் கிடைக்கும்படி காட்சிப்படுத்தினர், இந்த பெண்களுக்கு அவர்களின் தயாரிப்புகளுக்கான சந்தைகளைக் கண்டறிய தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்காக அதே இடத்தில் பட்டறை ஒன்றும் இடம் பெற்றது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்,சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் அப்பகுதியில் ஏராளமான பார்வையாளர்கள் மூன்று நாட்களும் கண்காட்சியை பார்வையிட்டனர்.