01st October 2023 19:10:11 Hours
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் அநுராதபுரத்தில் உள்ள ‘அபிமன்சல - 1’ நல விடுதிக்கு சனிக்கிழமை (செப். 23) போர்வீரர்களின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் விஜயம் மேற்கொண்டனர்.
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்லா அவர்கள் இந்நிகழ்ச்சியின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இவ்விஜயத்தின் போது அதிக வருமானம் ஈட்டும் திட்டமாக, வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஈக்கிள் விளக்குமாறு உற்பத்திப் பிரிவை அவர் திறந்து வைத்தார்.
விஜயபாகு காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்குடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதுடன், அவர்களுக்கு சில பரிசுகளையும் வழங்கினார். விஜயபாகு காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.